Ta:NeMo-MozillaLanguage

From MozillaWiki
Revision as of 17:08, 30 July 2012 by Gautha91 (talk | contribs)
Jump to navigation Jump to search

நீமோ கட்டுரை தளம்
உங்கள் மொழியில் மொசில்லா ?
கட்டுரை தளம் செல்ல | முகப்பு
ஆசிரியர்
கெளதம் அகிவட் ( Gautham Akiwate )
மொழிபெயர்ப்பாளர்கள்
விவேக் சுப்பிரமணியம் (Vivek Subramaniyam)
கௌதம்ராஜ் (Gauthamraj)

உங்கள் மொழியில் மோசில்லா

தொழில்நுட்பம் மக்களை பலப்படுத்துகிறது. தொழில்நுட்பம் மக்களை விடுவிக்கிறது. தொழில்நுட்பம் மக்களை தூண்டுகிறது. தொழில்நுட்பம் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.இவையெல்லாம் இல்லாமலுமிருக்கலாம்? இன்று தொழிநுட்பத்தில் இருந்து அறிவை பெற நினைக்கும் மக்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை தன் தாய் மொழியாக கொண்டவர்களே. மொழி தொழில்நுட்பத்திற்கு ஒரு தடையாக இருக்கும்போது தொழில்நுட்பத்தால் கூற்றுக்களை செய்யமுடியுமா என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றது ? இன்று தொழில்நுட்பம் பெருக்கமடைய மற்றும் தினசரி வாழ்க்கையை எளிதாக்க முயற்சிப்பதால் இது இன்றியமையாததாக இருக்கிறது. அது மட்டுமின்றி மக்கள் எளிமையாக கருதும் ஒரு மொழியில் மாற்ற வேண்டிய தேவையையும் எழுப்புகிறது.


கணிணியை பயன்படுத்த வேண்டும் என விரும்பும் மக்கள் ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியமா? ஆங்கிலம் அறியாமை மக்கள் தொழில்நுட்பத்தை உபயோக படுத்த ஒரு தடையாக இருக்க வேண்டுமா? இந்த சிக்கல் குறிப்பாக வளரும் நாடுகளில் எங்கு கல்வி பெரும்பாலும் பிராந்திய மொழிகளிலே கற்பிக்கபடுகிறதோ அங்கு பரவியுள்ளது.இது குறைந்த கல்வியறிவு விகிதத்துடன் இணைந்து குறிப்பாக கிராமப்புற ஏழைகள் மற்றும் கல்வி சமமான அனுமதி இல்லாத பெண்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களை (ICTs), அணுகுவதிலிருந்து தடை செய்கிறது.எனவே இந்த கேள்விகளுக்கு விடையளிக்ககூடிய ஒரு பதில் தேவைபடுகிறது.இந்த பிரச்சனைக்கு பதில் பொதுவாக l10n மற்றும் i18n என்று அழைக்கப்படுகிறது.


நாம் முதலில் மொழிபெயர்ப்பு என்றால் என்ன என புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.முக்கியமான ஒரு தயாரிப்பை எடுத்து அதை மொழி மற்றும் கலாச்சார ரீதியாக அது பயன்படுத்தப்படும் இலக்கு மொழிக்கு பொருத்தமானதக உருவாக்கும் செயல்முறை ஆகும்.மற்றொருபுறம் சர்வதேசமயமாக்கல் எளிதாக வெவ்வேறு அமைவிடதிற்கு ஏற்றவாறு பொருட்களை உருவாக்கும் செயல்முறை ஆகும், அடிப்படையில் மொழிபெயர்ப்பை எளிதாக்க.அதாவது "உலகிற்கு ஒரு குறியீடு அடிப்படையாக" உள்ளது. இன்று இணையதளம் மக்கள் வீட்டிற்கு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதில் ஒரு ஆக்க பங்கு எடுத்துள்ளது. இந்த பார்வையில் இணையதளத்திற்கான நுழைவாயில்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டால் மக்களால் எளிதாக தொழில்நுட்பங்களை அறிய முடியும் என்பது கட்டாயம் ஆகிறது.


இக்கட்டத்தில் மோசில்லா எங்கு பொருந்துகிறது? மொசில்லா என்பது உலகளாவிய இலாபம் இல்லாத ஒரு நிறுவனம் தனி மனிதர்களிடம் கட்டுப்பாட்டை தருவதோடு மட்டும் இல்லாமல் போதுமக்களை மனதில் கொண்டு இணையதளத்தின் எதிர்காலத்தை நல்ல முறையில் மாற்றி வடிவமைக்க உதவுகிறது.இன்று மோசில்லா திட்டம் உலகின் மிக பிரபலமான ஒரு வலை உலாவி, Mozilla Firefox உட்பட மென்பொருள் மிகவும் ஈர்க்கக்கூடிய வரம்பில் உள்ளது.இது மட்டும் இல்லை, மோசில்லா திட்டம் "சர்வதேசமயமாக்கல் மற்றும் மொழிபெயர்ப்பு" இரண்டிலும் ஃபோஸ் க்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.


இன்று மோசில்லா திட்டம் 70 க்கும் அதிகமான மொழிகளில் அதன் தயாரிப்புகளை வழங்குகிறது.சர்வதேசமயமாக்கல் மற்றும் மொழி மாற்ற உதவிய சமூகத்தில் மற்றும் பல்வேறு அமைவிடத்தில் தயாரிப்புக்கு ஏற்ப மென்பொருள் உருவாக்கிய உருவாக்குபவர் சமூகத்தில் உழைத்தவரின் முயற்சிகளுக்கு நன்றி.இந்த திட்டத்தின் கொள்கை என்னவென்றால் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை உபயோகிப்பவர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே. இத்திட்டத்தின் மற்றொரு கொள்கை என்ன வென்றால் mozilla.org கின் பொருட்கள் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெர்யர்க்கபடவேண்டும் என்பதே.


எனவே, இப்போது நீங்கள் கூட மோசில்லா தினமும் பயன்படுத்தும் ஏறத்தாழ 450 மில்லியன் மக்கள் மீது ஒரு தாக்கத்தை உண்டாக்க பங்களிக்கலாம். நீங்கள் பல்வேறு வழிகளில் உதவலாம் ! துவக்கத்தில் மொசில்லாவினை மக்கள் தங்கள் சொந்த மொழியில் உபயோக படுத்தவும் ஒரு மாற்றத்தை உண்டாக்கவும் உதவலாம். நீங்கள் மோசில்லாவின் உள்ளூர்மயமாக்கல் முயற்சிகளில் சேர்ந்தால் மற்றும் சமூகத்தின் அங்கமாகவும் இருக்க முடியும்! வாருங்கள் வந்து ஒரு மாற்றத்தினை உண்டாக்க உதவுங்கள் !